சென்னை,டிச.16- நாடாளுமன் றத்தில் 14 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண் டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவரும், மக்களவை உறுப் பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“நாடாளுமன்ற மக்களவைக் குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச் சர் அமித் ஷா பதவி விலகவேண்டும்.
தற்போது இடைநீக்கம் செய் யப்பட்டுள்ள 14 எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை உடனே ரத்து செய்யவேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவை களின் தலைவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
பா.ஜ.க. உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவால் பரிந்துரைக்கப்பட்டு மக்களவைக்குள் வந்த பார்வை யாளர்கள் இருவர் திடீரென பார்வையாளர் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசினர்.
அவர்களை எதிர்க்கட்சி உறுப் பினர்கள் சிலர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பாதுகாப்புச் சோத னைகளை மீறி புகைக் குண்டுகளை அவர்கள் எப்படி எடுத்துவந்தனர்? இந்தப் பாதுகாப்புக் குறைபாடு உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி யுள்ளது.
‘இதுகுறித்து உள்துறை அமைச் சர் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும். அவையில் விதி எண்- 267 இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும்’ என இந்தியா கூட்டணி கட்சிகளால் முடிவு செய்யப்பட்டு, அது மக்களவை/ மாநிலங்களவைத் தலைவர்களுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.
அவையில் உள்துறை அமைச் சர் பதிலளிக்காததால் அதை இந்தியா கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்காக 14 மக்களவை உறுப் பினர்களும்; மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வெளி ஆட்கள் உள்ளே அத்து மீறி நுழைந்து புகைக் குண்டு வீசுவதற்கு அறிந்து அறியாமலோ காரணமாகவுள்ள பாஜக எம்.பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
மாறாக, விளக்கம் கேட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டிருப்பது வெட்கக் கேடானது!
இத்தகைய ஜனநாயகப் படு கொலைக்கு இரு அவைகளையும் வழிநடத்திய அவைத் தலைவர்கள் துணைபோவது அதிர்ச்சியளிக் கிறது.
நாடாளுமன்றப் பாதுகாப்பில் நிலவும் குறைபாடு மற்றும் கவனக் குறைவுக்குப் பொறுப்பேற்று உள் துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அத்துடன், எதிர்க்கட்சி உறுப் பினர்கள் மீதான இடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்வதுடன், விதி எண் 267 -இன் கீழ் அவையில் அது குறித்து விவாதம் நடத்த முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.