சிதம்பரம் நகர திராவிடர் கழக தலைவர் கோவி.குணசேகரன் மகள் அம்மு என்கிற சரண்யா குருங்குடி தியாகராஜன்-ராசாயாள் ஆகியோர் மகன் செல்வேந்திரன் மண விழா 20.10.2023 அன்று காட்டுமன்னார்குடியில் நடைபெற்றது. அவர்களின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி சிதம்பரம் பொன்னம்பலம் திருமண மண்டபத்தில் 21.10.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்ட கழக செயலாளர் அன்பு சித்தார்த்தன், நகர கழக அமைப்பாளர் செல்வரத்தினம், மேனாள் மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன், மேனாள் சிதம்பரம் நகர செயலாளர் கோவி.சுந்தரமூர்த்தி, பு.தா.அருள்மொழி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய அமைப்பாளர் சேகர் ஆகியோர் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். கழகத் தலைவர் தமிழர் தலைவரின் வாழ்த்தும் அளிக்கப்பட்டது.