டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
• நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளி : இதுவரை 14 எம்.பி.க்கள் கூண்டோடு இடைநீக்கம்!
• மக்களவைக்கு வராத திமுக எம்.பி. பார்த்திபனும் இடைநீக்கம்; தவறை உணர்ந்து திரும்பப் பெற்றார் சபாநாயகர்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
• சிதம்பரம் நடராஜர் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது; தனி நபர்களுக்கு அல்ல, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.
• தமிழ்நாடு அரசின் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை வருகிற 18ஆம் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
• எம்.பி. பதவி நீக்கப்பட்ட மஹூவா தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை.
• கோவா விமான நிலையத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் பயணியிடம் ஹிந்தி கற்க வேண்டும் என்று பாதுகாப்பு படை வீரர் பாடம் எடுத்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• மூத்த நீதிபதிகளினால் தனக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு உத்தர பிரதேச பெண் நீதிபதி கண்ணீர் கடிதம்.
• இடஒதுக்கீடு என்பது நீண்டகாலமாக மறுக்கப்பட்டவர்களை அணுகுவதற்கான ஒரு கருவியாகும். ஜாதி பாகுபாடு நீடிக்கும் வரை, ஜாதி அடிப்படையிலான உறுதியான நடவடிக்கையை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் கட்டுரையாளர் பேராசிரியர் அதீதி நாராயணி பஸ்வான்.
தி டெலிகிராப்:
• அசைவ உணவு விற்பனை கட்டுப்பாடு, வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கி வைக்க தடை; இதுவே மத்திய பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்ற மோகன்யாதவின் முதல் அறிவிப்புகள்
டைம்ஸ் ஆப் இந்தியா:
• வாரணாசியில் நிதிஷ் குமாரின் பேரணியை ரத்து செய்த உ.பி அரசு மீது அய்க்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா