சென்னை, டிச. 15- டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 16.12.2023 மற்றும் 17.12.2023 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:
கிழக்கு திசைக் காற்றில்நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று சில இடங்களிலும், நாளை (டிச. 16) பெரும்பாலான இடங்களிலும், வரும் 17ஆ-ம் தேதி தென் தமிழ் நாட்டில் பெரும்பாலான இடங்க ளிலும், வட தமிழ்நாட்டில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 18ஆ-ம் தேதி சில இடங்களி லும், வரும் 19, 20-ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நாளை கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி, ராமநாத புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17ஆ-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக் காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.