கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை அவமதித்த மோடியின் செயல் சமூகவலைதளத்தில் பெரும் விவாதப் பொருளாகி வருகிறது.
19.11.2023 அன்று கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் நடந்த இதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் உலகக் கோப்பையை மோடியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
பொதுவாக உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினரோடு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர்கள் படம் எடுப்பார்கள்.
ஆனால், குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் தனது பெயரில் உள்ள அரங்கில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் மட்டுமே மேடைக்கு அழைக்கப்பட்டார். இந்த நிலையில் கோப்பையை வழங்கிய நரேந்திரமோடி கோப்பையை வென்ற அணியினரோடும் அந்த அணியின் தலைவரோடும் படம் எடுக்காமல் கீழே இறங்கினார். ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் நரேந்திர மோடி தன்னோடு படம் எடுப்பார் என்று நினைத்து எதிர்பார்த்து இருந்த போது மேடையில் இருந்து பாராமுகமாக கீழே இறங்கிச் சென்றுவிட்டார்.
இந்த நிகழ்வின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் ஏமாற்றத்துடன் சிறிதுநேரம் மேடையில் நின்றுவிட்டு பிறகு அவர் கீழே இறங்குகிறார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் பெரும் விவாதப் பொருள் ஆனது.
சமூக வலைதளங்களில் மோடியின் இந்த நடவடிக்கை குறித்து பலர் கருத்து தெரிவித்தனர். அதில் ஆர்.எஸ்.எஸ். சகாவில் மனிதநேயம் நல்லொழுக்கம், பொதுவிடத்தில் மற்றோர்களை மதிப்பது போன்றவை என்றுமே சொல்லிகொடுப்பதில்லை. அதனால் தான் பிரதமர் கிரிக்கெட் போட்டியில் வென்ற பேட் கம்மின்ஸ்-க்கு கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச மரியாதையைக் கூட தரவில்லை என்று எழுதி வருகின்றனர்.