சென்னை, டிச.15 மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.12.2023 அன்று மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னை, செங்கல் பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி (Measles and Rubella vaccination) செலுத்தும் முகாமினைத் தொடங்கி வைக்கும் வித மாக, பெருநகர சென்னை மாநகராட்சி, ஆழ்வார் பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
பின்னர்செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது;
தட்டம்மை – ரூபெல்லா:
மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 9 மாதம் முதல் 15 வயது வரையிலான இளம் சிறார்களுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் 13.12.2023 முதல் 30.12.2023 வரை 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். அங்கன்வாடி மய்யங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் இந்த தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகள் போடப்படுகிறது. பள்ளிகளை பொறுத்தவரை ஸிஙிஷிரி எனும் நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களின் மூலம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களை பொறுத்தவரை 9 மாதம் தொடங்கி 15 வயது வரையிலான இளம் சிறார்களின் எண்ணிக்கை 27.42 இலட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தாலும், மழைக்கால நோய்களில் இருந்து காக்கும் பொருட்டு, கூடுதல் தவணை தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை பொறுத்தவரை விரயம் உட்பட 36 இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. ஒன்றிய அரசிடம் இருந்து 10 இலட்சம் தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளது, விரைவில் அவை தமிழ்நாடு மாநிலத்திற்கு வரும். தற்போது 2.90 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை எடுத்துள்ளது.
29.10.2023 அன்று தொடங்கப்பட்டு இந்த டிசம்பர் மாதம் முழுவதும் 10 வாரங்கள் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டு, இதுவரை 7 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது.
அந்த 7 வாரங்களில் மட்டும் 16,516 முகாம்கள் நடத்தப்பட்டு, 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர். பருவமழையின் காலத்தில் 10 வாரங்கள் தொடர்ச் சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன்காரணமாக பருவ மழை யினால் ஏற்படும் நோய் பாதிப்புகள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், 16.12.2023, 23.12.2023 மற்றும் 30.12.2023 ஆகிய 3 நாட்களும் இந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி மற்றும் உயரலு வலர்கள் கலந்து கொண்டனர்.