டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை நிராகரித்த ஆளுநருக்கு வைகோ கண்டனம்

2 Min Read

அரசியல்

சென்னை, அக். 24 – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 9ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பின ராக இருக்கும் முனியநாதன் பொறுப்பு தலைவராக தற்போது வரை இருந்து வருகிறார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாததால், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், தேர்வு முடிவுகள் போன்ற வற்றை அறிவிப்பது, வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய டி.என்.பி.எஸ்.சி. தலை வர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தேர்வு செய்து, பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை பெறுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், ஆளுநர் மாளி கையில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. தலைவரை தேர்வு செய்த விவகா ரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின் பற்றப்பட்டதா?, தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது?, அதேபோல் உறுப்பினர்கள் தேர் வில் கடைப்பிடிக்கப்பட்ட நடை முறைகள் என்ன? என்பன போன்ற பல்வேறு விளக்கங்களை கேட்டு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப் பப்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டி ருந்த கேள்விகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் முறையான விளக் கக் கடிதம் அளிக்கப்பட்டது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு எதனை பின்பற்றி நடத்தப் பட்டது?, உச்சநீதிமன்றம் வழி காட்டுதல் எப்படி பின்பற்றப்பட்டு இருக்கிறது? தலைவர் பதவிக்கு யார்? யாரெல்லாம்? விண்ணப்பித் தார்கள்? என்பன உள்பட பல் வேறு தகவல்களை விளக்கத்துடன் அரசு தெரிவித்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில் சைலேந்திர பாபு நியமனத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். மேலும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி, வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரைத் துள்ளதாகவும் தகவல் வெளியா கியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது; “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக மேனாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்கு மாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.

சைலேந்திர பாபுவிற்கு அந்தத் தகுதி இல்லை என தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்திருப்பது, அவரது அதிகார எல்லையை மீறிய சர்வதிகார முடிவாகும். தமிழ்நாடு அரசு செய்கின்ற பரிந் துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அல்ல. பாஜக அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழ்நாடு ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *