தி கோல்டன் மோல் எனப்படும் பாலூட்டி கண்ணில் பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே, இது அழிந்து விட்டதாகவே கருதப்பட்டது. இதுபோன்ற உயிரினங் களைக் கண்டுபிடிக்க ‘மோஸ்ட் வான்டெட் லாஸ்ட் ஸ்பீஷீஸ்’ எனப்படும் திட்டம் இயங்குகிறது. இந்த இனம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய அவற்றின் மரபணுக்கள் வாயிலாக மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. 87 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது இந்த உயிரினம் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தி நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ எனப்படும். இது நாம் சாப்பிடும் உணவு வழியாக குடலுக்குள் நுழைந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆழ்கடலில் இருக்கும் நண்டுகள், குறிப்பாக ‘லெப்ரக்ஸ் நார்வேஜிக்கஸ்’ எனப்படும் இறால், அவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக் துகள்களை அரைக்கும் தன்மை கொண்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை இந்த வகை இறால்கள் உணவாக உட்கொள்கின்றன. இந்த பிளாஸ்டிக்குகள் அவற்றின் இரைப்பையில் செரிமானமாகாமல் சிறு துகள்களாக உடைபடுகின்றன. பின்பு இது ‘மைக்ரோ பிளாஸ்டிக்காக’ கடலில் கலக்கிறது. இது உணவு சங்கிலிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
தி எல்.டி.எல். வகை கொலஸ்ட்ரால் மிகவும் தீங்கா னது. எச்.டி.எல். வகை கொலஸ்ட்ரால் உடலுக்கு நல்லது என நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நிறைய எச்.டி.எல். கொலஸ்ட்ரால் உணவுகளை சாப்பிடுவது மறதிநோய்க்கு வழிவகுக்கும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 80 சதவீதத்திற்கும் மேல் எச்.டி.எல். கொலஸ்ட்ரால் உள்ளவர் களுக்கு, மற்றவர்களை விட 27 சதவீதம் மறதிநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என ஆஸ்திரேலிய மோனாஷ் பல்கலை. ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தி சாதாரண சிமென்ட் உற்பத்தியில் கரியமில வாயுவின் வெளியேற்றம் அதிகமாக இருக்கிறது. இதற்கு மாற்றாக உடைந்த பீங்கான் பொருட்களைக் கொண்டு ஒரு புதிய வகை சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. உடைந்த வாஷ்பேசின், கழிவறை கோப்பை, பீங்கான் கப்புகள் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் இவை, கரைசல்களுடன் கலக்கப்பட்டு சிமென்ட் ஆக மாற்றப்படுகிறது. இது வழக்கமான சிமென்டைப் போல வலுவாக இருக்கிறது.