கால்டுவெல் குறித்த ஆளுநரின் பேச்சு சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை கண்டனம்

2 Min Read

அரசியல்

சென்னை, அக். 24 –  “பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டு வெல் போன்றவர்கள் அனுப்பப் பட்டார்கள்’ என்று தமிழ்மொழிக் கும், தமிழர்களுக்கும் சிறப்பு செய் திட்ட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரை சிறுமைப் படுத்தும் முயற்சியில் இழிவுபடுத் தும் விதமாக ஆளுநர் பேசியிருப்ப தற்கு வன்மையான கண்டனங் களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்  செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி யில் நேற்று (23.10.2023) நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ‘பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டு வெல் போன்றவர்கள் அனுப்பப் பட்டார்கள்’ என்று தமிழ்மொழிக் கும், தமிழர்களுக்கும் சிறப்பு செய்திட்ட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் இழிவு படுத்தும் விதமாக பேசியிருப்பதற்கு வன்மையான கண்ட னங்களை தெரிவித்துக் கொள் கிறேன்.

அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பே இந்தியாவின் தொன்மை யான, சிறப்பான மொழி சமஸ் கிருதம் என்றும், தமிழ்மொழி உட் பட அனைத்து மொழிகளும் அந்த மொழியிலிருந்துதான் தோன்றி யது என்ற மாயை இந்தியாவில் நிலவியது.

மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் பல மொழிகளை ஆராய்ந்து, சமஸ்கிருதத்துக்கு முன்பிருந்த மொழி தமிழ்மொழி என்றும், அதன் தொன்மையையும், சிறப்பையும் ஆய்வின் மூலம் உலகத்துக்கு உணர்த்தியவர்.

சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ் மொழியால் இயங்க முடியும் என் றும் சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் பிற நாட்டினருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று முதன் முதலில் அச்சில் ஏற்றியவர். தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகம் குறித்தும் வெளியிட்ட வர். சமஸ்கிருதத்தின் முகமூடியை கிழித்து, தமிழ்மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் களை இழித்துப் பேசுவது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களில் மூழ்கிய வர்களால் மட்டும்தான் முடியும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பிய மசோதாக்கள், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகள் எதையும் நிறைவேற்றாமல், ஆளு நருக்கு உரிய எந்தவொரு வேலை யையும் பார்க்காமல், கிடைக்கும் மேடைகளில் அரசியல்வாதி போல பேசுகிறார் தமிழ்நாடு ஆளுநர். 

தமிழ்மொழிக்கும், தமிழர்களுக் கும் யார் நல்லது செய்கிறார்களோ அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்களை இழிவு படுத்தும் நோக்கத்தோடு பேசும் தமிழ்நாட்டின் ஆளுநருக்கு மீண் டும் ஒருமுறை எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *