லக்னோ, டிச.14 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தேசிய மகளிர் ஆணையம் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட் டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன் புறுத்தல், கடத்தல் போன்ற குற்றங்களால் 1.20 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர் ராமர் கோவில் கட்டு மானம், ஞானவாபி மசூதி அகழ்வாராய்ச்சி என சுழன்று வருகிறார்.
கடந்த வாரம் இருசக்கர வாகன பயிற்சி மேற்கொண்ட பெண், காவல் நிலையம் அருகே கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளானார். இந்நிலையில், திங்களன்று லக்னோவிற்கு அருகே உள்ள தனியார் மருத்துவ பல்கலைக் கழகத்தின் பின் புறம் உள்ள கடையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை கடத்தி குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இளம்பெண் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்த தாகக் கூறினாலும், அவர்கள் யார் என்ற விவரத்தைப்பற்றி காவல்துறையினர் எதுவும் கூறவில்லை.
இதுதான் பிஜேபி ஆட்சி! மேலும் ஒரு இளம்பெண் பாலியல் வன்கொடுமை
Leave a comment