பேராசிரியர் மு.நாகநாதன்
தி.மு.க. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அப்துல்லா காஷ்மீர் தொடர்பாக ஆற்றிய உரையில் பெரியார் கூறிய கருத்தைச் சிறந்த முறையில் மேற்கோள் காட்டினார்.
பெரியார் பெயரைப் பதிவிலிருந்து நீக்கியது மிக மிகத் தவறான செயலாகும். சங்கிகளுக்கு வரலாறு தெரியாது! வரலாற்றைத் திரிக்க மட்டும்தான் தெரியும்! 1990ஆம் ஆண்டில் மண்டல் உரையில் நாடாளு மன்றத்தில் சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் பெரியாரின் பெயரைப் பதிவு செய்துள்ளார். இந்திய வரலாற்றில் பெரியாரின் தொண்டறம் என்றும் நிலை பெற்றிருக்கும்.
பிரித்தானிய பேராதிக்கத்திற்கு எதிராக விடுதலைப்போரில் அவர் கண்ட களங்கள் பற்பல. சமூகச் சீர்திருத்தக் களத்தையும் விடுதலை இயக்கத்தில் இணைத்து வெற்றி கண்ட ஒரே தலைவர் பெரியார்தான்! இதை உணர்ந்த அறிவார்ந்த மக்கள் வைக்கம் வெற்றியைப் போற்று கின்றனர்!
கேரளா தமிழ்நாடு அரசுகள் வைக்கம் நூற்றாண்டு விழாவைப் பாரறிய விழாவாகக் காண்கின்றன!
பெரியார் என்றால் சங்கிகள் ஏன் அலறுகிறார்கள்?
80ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் கவிதையில் இதற்கான விடையைக் காணலாம்.
“பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்
ஈ.வே.ரா என்ற வார்த்தை
இந்நாட்டு ஆரியத்தின்
அடிப்பீடம் ஆட்டுகிற சூறாவளியாம்
அவர்
வெண் தாடி அசைந்தால் போதும்
கண் ஜாடை தெரிந்தால் போதும்
கறுப்பு உடை தரித்தோர் உண்டு
கொடுமையை
நறுக்கியே திரும்பும் வாள்கள்!
விடுதலை களத்தில்
மன்னிப்பு கோரிய கோழை சாவர்க்கர் கூட்டத்திற்குப்
பெரியாரின் பெயர்
அச்சம் தருகிறது!
“மானமும் அறிவும்
மனிதருக்கு அழகு ”
என்றார் பெரியார்
இந்த இரண்டையும் இழந்த சங்கிகள் ஆடும் ஆட்டங்களும் அடிக் கும் கொட்டங்களும் பெரியாரின் அறிவு ஆயுதத்தால் சாய்க்கப்படும்!
நல்ல தீர்ப்பினை மக்கள் மன்றம் வழங்கும்.