கோவை, டிச.14- ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அனு மதிக்கக் கூடாது என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார்.
‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்காகவும் கோவை சித்தா புதூர் பள்ளியில் பள்ளி மாணவ-மாணவி களுக்காகவும் நடைபெற்றது. இதை யொட்டி பேச்சுப் போட்டியும் நடந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு இந்த நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினார்
மாநில சிறுபான்மை ஆணைய தலை வர் பீட்டர் அல்போன்ஸ் முன்னிலை வகித்தார்.
கல்லூரி மற்றும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது அனைவருக் கும் சிறப்பான கல்வி கிடைத்து வருகிறது. முன்பு 100 பேர் பட்டம் பெற்றால் 94 விழுக்காட்டளவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருந் தார்கள்.
இப்போது இந்த நிலை பீகாரில் உள் ளது. அங்கு பட்டதாரிகள் 2.3 சதவீதம் உள்ளனர். இது ஜாதிவாரி சுணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 72 சதவீதம் பெண்கள் படித்து வருகின்றனர். இதற்கு தி.மு.க அரசின் பல்வேறு திட்டங்கள்தான் கார ணம். ராஜாஜிக் கொண்டு வந்த குலக் கல்வி முறையை தற்போது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 74 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 11 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர்.
புதிய கல்வி முறை அமல்படுத்தப் பட்டால், இது 7,200 இடமாக குறைந்து பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொண்டு வரப்படுவர்.
நம் இடத்தில் நாம் படிக்க முடியாது. புதிய கல்விக் கொள்கையை புறவாசல் வழியாக கொண்டு வருகின்றனர். அதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. எல்லோருக்கும் கல்வி என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.
மெட்ரிக் பாடத்திட்டத்தை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் கலை ஞர் கொண்டு வந்தார். அனைவருக்கும் கல்வி முறையை சீர்குலைக்கும் நோக்கில் புதிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு கொண்டுவருகிறது. காமராஜர் காலத்தில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட் டது. இப்போது காலை உணவு திட்டத் தால், 17 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜனதா பலவீனம்
பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறிய தாவது.-
வெள்ள நிவராணப் பணிகளை பொதுமக்கள் பாராட்டி இருக்கின்றனர். ஒன்றிய குழு தமிழ்நாடு அரசு சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய் யப்பட்டுள்ளது.
ஒன்றிய நிதி அமைச்சர் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர். அவர் சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி வாங்கி கொடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் யார் அத்துமீறி வண்ண புகை குண்டுகள் வீசியிருந்தா லும் கடுமையாக தண்டிக்கப்பட வேண் டும். நாடாளுமன்றத்தில் இப்படி தாக்குதல் நடந்துள்ளது பாரதீய ஜனதாவின் பல வீனத்தை காட்டுகிறது.
-இவ்வாறு அவர் கூறினார்.