துணை ராணுவப்படைகளில் ‘கான்ஸ்டபிள்’ பதவி யில் 26,146 இடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம்: எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) 6174, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.எஸ்.அய்.எப்.,) 11,025, மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.,) 3337, சகஷ்ட்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) 635, இந்தோ திபெத் எல்லை காவல்துறை (அய்.டி.பி.பி.,) 3189, ஆயுத ரிசர்வ் படை (ஏ.ஆர்.,) 1490, சிறப்பு எல்லைப்படை (எஸ்.எஸ்.எப்.,) 296 என மொத்தம் 26,146 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2024 அடிப்படையில் 18 – 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
உயரம்: ஆண் 170 செ.மீ., பெண் 157 செ.மீ.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, உடல் தகுதி தேர்வு. மருத்துவ சோதனை. தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
தேர்வு மய்யம்: சென்னை, வேலூர், கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100.பெண், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 31.12.2023
விவரங்களுக்கு: ssc.nic.in