தமிழ்நாடு சுகாதாரத்துறையில் ‘பார்மசிஸ்ட் (சித்தா)’ பணிக்கு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: பார்மசிஸ்ட் பிரிவில் 26, இ.இ.ஜி., டெக்னீசியன் 10 என மொத்தம் 36 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பார்மசிஸ்ட் பணிக்கு இந்தியன் சிஸ்டம் ஆப் மெடிசன் / பார்மசி இன் சித்தா / ஒருங்கிணைந்த பார்மசி என ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ, இ.இ.ஜி., பணிக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300
கடைசி நாள்: 18.12.2023
விவரங்களுக்கு: mrbonline.in