கிருட்டினகிரி, அக். 24 – கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் கோ.திராவிட மணியை கடந்த 20ஆம் தேதி திருச்சியில் நடை பெற்ற தலைமைச் செயற்குழு கூட் டத்தில் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களால் தலைமைக் கழக அமைப்பாளராக அறிவிக்கப்பட்ட தன் மகிழ்வாக 22.-10.2023 அன்று காலை 10 மணி அளவில் காவேரிப் பட்டினம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது.
மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கா .மாணிக் கம், துணைத் தலைவர் வ. ஆறுமு கம் இருவரும் இணைந்து சால்வை அணிவித்து திராவிடமணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண் டனர் .
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் தி.கதிரவன், காவேரிப்பட்டினம் ஒன்றிய தலை வர் பெ.செல்வம், செயலாளர் பெ. செல்வேந்திரன், கிருஷ்ணகிரி ஒன் றிய தலைவர் த.மாது, மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், மேனாள் ஒன்றிய தலைவர் சி. சீனி வாசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே. புகழேந்தி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் செ.ப.மூர்த்தி, துணைச் செயலாளர் ராஜேந்திர பாபு, மேனாள் மாவட்ட இளைஞ ரணி தலைவர் இல.ஆறுமுகம், மாணவர் கழகத் தோழர்கள் கலை யரசி, ராஜபாண்டி, மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.