சென்னை, டிச.13- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (12.12.2023) முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், இந்திய கம்யூ னிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத் தொகைக்கான காசோலையையும் வழங் கினார். அப்போது, கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன், நா.பெரியசாமி ஆகியோர் உடன் இருந் தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது
Leave a comment