மதுரை, அக். 24 – முத்தமிழறிஞர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் மூன்றாண்டுகளுக்குட்பட்ட வழக்குரை ஞர்களுக்கான 4ஆவது மண்டல பேச்சுப் போட்டி திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (22.10.2023) அன்று மதுரை குறிஞ்சி மகாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ். இரவிச் சந்திரன்; துணைச் செயலாளர் பச்சை யப்பன்; திமுக தலைமைக் கழக வழக்கு ரைஞர் சரவணன், மதுரை வடக்கு மாவட்ட அமைப்பாளர் கலாநிதி, மாநகர் மாவட்ட அமைப்பாளர் தேவநேசன், தெற்கு மாவட்ட அமைப்பாளர் சிவநேசன், மாவட்ட வழக்குரைஞர் அணி நிர்வாகி கள், வழக்குரைஞர்கள் கலந்துகொண்ட னர். இப்போட்டிக்கு நடுவராக வழக்கு ரைஞர் நன்மாறன் கலந்து கொண்டார்.
இப்போட்டியில் முதல் பரிசு பெற்ற சிவகங்கை நீதிமன்ற வழக்குரைஞர் சுமித்ராவுக்கு ரூபாய் 50,000 மற்றும் தங்கப் பதக்கம், சான்றிதழ்; இரண்டாம் பரிசு பெற்ற தேனி நீதிமன்ற வழக்குரை ஞர் அற்புதராஜ்க்கு ரூபாய் 25,000 – வெள்ளிப்பதக்கம், சான்றிதழ்; மூன்றாம் பரிசு பெற்ற மதுரை நீதிமன்ற வழக்குரை ஞர் விஜயசாந்திக்கு ரூபாய் 15,000 – தாமிரப் பதக்கம், சான்றிதழ்; ஆறுதல் பரிசு பெற்ற மதுரை நீதிமன்ற வழக்கு ரைஞர்கள் சர்மிளாவுக்கும், சுபலட்சுமிக் கும் தலா ரூபாய் 5,000 வெண்கலப்பதக் கம், சான்றிதழும் மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் களும் வழங்கப்பட்டன. இப்பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற வழக்குரை ஞர்கள் டிசம்பர் 6 அன்று சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.