பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு…
வருகிற டிசம்பர் 24 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாளினை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
போட்டிக்கான தலைப்பு:
1. “பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்”
2. “பெரியார் ஒரு தொலைநோக்காளர்”
3. “பெரியாரின் அறிவியல் பார்வையும், அணுகுமுறையும்”
(இதில் ஏதாவது ஒரு தலைப்பு)
மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டத்தில் உள்ள திராவிடர் கழக பொறுப்பாளர்கள், பெரியாரிய உணர் வாளர்கள் அனைவரையும் அணுகி இது குறித்து பேசி போட்டி நடைபெறும் தேதி, இடம் முடிவு செய்ய வேண்டும்.
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அமைப்பின் சார்பில் தக்க பரிசளிக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு அஞ்சலிலோ அல்லது நேரிலோ சென்று முதல்வரிடம் கடிதம் கொடுக்கவேண்டும்.
போட்டி குறித்து பொதுவெளியிலும், சமூக ஊடகங் களிலும் விளம்பரம் செய்யலாம்.
இந்த போட்டியினை டிசம்பர் 20 முதல் 31 க்குள் நடத்தி தலைமைக்கு அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள்
– மாநில பகுத்தறிவாளர் கழகம்