சென்னை, டிச.13 வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட, மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களைப் பழுது நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட “மிக்ஜாம்” புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், வெள் ளத்தினால் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்கள் (இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி மற்றும் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி) தண்ணிரில் மூழ்கி சேதமடைந்திருந்தால், அதனை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, மேற்படி பாதிப்படைந்தவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு உரிய விவ ரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாற்றுத் திறனாளிகள் :
வடசென்னை – 9499933589
தென் சென்னை – 9499933470
திருவள்ளூர் – 9499933496
காஞ்சிபுரம் – 9499933582
செங்கல்பட்டு – 9499933476
அவ்வாறு பெறப்படும் விவரங்களின் அடிப் படையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் உபகரணங்கள் பழுது நீக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.