சென்னை, டிச.13 ‘‘மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் நடத்தும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண உதவியாக ரூ.6000 ரொக்கமாக வழங் குவது தொடர்பான ஆலோ சனைக்கூட்டம் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நேற்று (12.12.2023) நடந்தது. தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி ‘‘மிக்ஜாம்” புயல் மழை காரணமாக சென்னை, செங் கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய மாவட்டங் களில் கடுமையான பாதிப் புகள் ஏற்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் துரிதமாக நடந்தது. தொடர்ந்து சீரமைப்புப் பணி கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கிடவும், இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடை களின் மூலம் ரொக்கமாக வழங்கிடவும் உத்தரவிட் டுள்ளார்.
இதன் அடிப்படையில், நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை வழங்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் நியாய விலை கடைகளில் மேற்கொள்ள வேண்டிய ஏற் பாடுகள், பொதுமக்களுக்கு முறையாக சேர்க்க வேண்டிய நடவடிக்கைகள், அதிகாரி களுக்கு பயிற்சி வழங்குவது குறித்து விரிவான ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலா ளர் கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப் பையன், கூட்டுறவு சங்கங் களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜெ.விஜயராணி மற்றும் சிறப் புப்பணி அலுவலர் (தமிழ்நாடு கூட்டுறவு வங்கி) எம்.பி.சிவன் அருள் உட்பட கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.