ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து, நாகப்பட்டினம் நகரில் தொடங்கவுள்ள பரப்புரை பயண தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்க திருவாரூர் இரயில் நிலையத்தில் வந்திறங்கிய தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சி முழக்கத்தோடு உற்சாகம்பொங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப் பாளர்கள் இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன்,
இல. மேகநாதன் (தி.மு.க.) தலைமைக்கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேசு, மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் தென்காசி சு.இனியன் இர.நிலவன், பரணிதரன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாநில ப.க.ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், மாவட்ட துணைத் தலைவர் கி.அருண்காந்தி, மாவட்ட துணைச் செயலாளர் கோ.இராமலிங்கம், நகரத் தலைவர் கா.சிவராமன், நகரசெயலாளர் பி.ஆறுமுகம்,செங்குட்டுவன், விஜய், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் குபேந்திரன். நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்டச் செயலாளர் செ.புபேஸ்குப்தா சட்டக்கல்லூரி திராவிட மாணவர்கழக மாநில அமைப்பாளர் இளமாறன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் குட்டிமணி,மாவட்ட இளைஞர் அணி தலைவர் இராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்று தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.