ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய ‘‘ஆரியர் – திராவிடர்” பிரச்சினை குறித்து செய்தியாளர் ஒருவர் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கேட்டபோது,
‘‘நான் அந்த அளவுக்குப் படிச்சவனில்லை. இந்தக் கதை எல்லாம் படிச்சி சொல்லணும்னா பெரியதொரு ஆய்வு பண்ணனும். ஆய்வு பண்ணினாதான் இதெல்லாம் உண்மையா? பொய்யான்னு தெரியும். அதுக்கு நான் உட்பட்டவனல்ல” என்று உளறிக் கொட்டியிருக்கிறார்.
கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார். அவர் எழுதிய ‘‘ஆரிய மாயை” என்ற நூலைக் கூட படிக்காதது ஒருபுறம் இருக்கட்டும்!
‘‘ஆரிய மாயை” என்ற நூல் அண்ணாவால் எழுதப்பட்டது என்றுகூடத் தெரியாதா?
இன்னொன்று, அண்ணா தி.மு.க.வில் ‘‘திராவிட” என்ற வரலாற்றுச் சொல்லும் இருக்கிறதே – அதுகூடத் தெரியாமல் அகில இந்திய அண்ணா ‘‘திராவிட” முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரா?
புராணத்துக்கும், வரலாற்றுக்கும் வேறுபாடு தெரியாத ஒருவர்தான் அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளரா?
அண்ணா தி.மு.க.வில் தப்பித் தவறி வரலாறு தெரிந்தவர்கள் இருந்தால், அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளருக்கு பாடம் சொல்லித் தரட்டும்! அல்லது கட்சியிலிருந்து ‘அண்ணா திராவிட’ என்பதை நீக்கட்டும்!