ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1: சபரிமலை சீசனில் அதிகம் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் கூறி பல்வேறு தடை போட்டார்கள் (Check drug trade in Sabarimala: Panel ‘டைம்ஸ் ஆப் இந்தியா ரிப்போர்ட்’ OCTOBER 30, 2001) தற்போது மீண்டும் விமானத்தில் இருமுடியைக் கொண்டுசெல்ல இருந்த தடையை விலக்கி உள்ளார்கள். கடத்தல்காரர்கள் திருந்திவிட்டார்களா? 

– த.ஆறுமுகம், வேலூர்

பதில் 1: மில்லியன் டாலர் கேள்வி இது!

சிறைக்கஞ்சா வீரர்கள் அதில் கலந்திருக் கிறார்களா? கடத்துகிறார்களா என்று ஆராயும் பொறுப்பு காவல்துறைக்கு உண்டு!

கேள்வி 2: பீகார் அரசின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக யாரும் நீதிமன்றம் செல்லவில்லையே?

– மா.கோவிந்தசாமி, திருத்தணி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 2: பொறுத்திருந்து பார்ப்போம்; எதிர் வழக்கு என்பது முக்கியமல்ல. என்றாலும் நிதிஷ்குமார், தேஜஸ்வி அரசு அதில் வெல்லும்.

தமிழ்நாட்டைப் பார்த்து 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புக்கு முயற்சி செய்கின்றனர் என்பது நமக்கு, முக்கியச் செய்தி அல்லவா?

கேள்வி 3: ஒரு மாத முடிவில் இஸ்ரேல் – காசா போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது, ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவிற்கு வரவில்லையே – ஏன்?

– தி.பார்த்தசாரதி, திருச்சி

பதில் 3: இதுகூட இஸ்ரேல் பிணைக் கைதிகளால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத நற்பலன். அப்படி ஏதும் அங்கே இல்லையோ?

கேள்வி 4: போலி விளம்பரம் செய்தால், ரூ.ஒரு கோடி அபராதம் விதிப்போம் என்று கருப்புப் பணச் சாமியார் ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதே?

– சா.கந்தசாமி, மதுரை 

பதில் 4: எச்சரிக்கை எதற்கு? அபராதத்தை நேரடியாக விதித்தாலும் அவர் கவலைப்பட மாட்டார்; கட்டி விடுவார். பல கோடிகள் சம்பாதித்தவருக்கு இது ஒரு துரும்பு மாதிரிதானே!

கேள்வி 5: பிசிசிஅய் நிறுவனம் உலகக்கோப்பை இறுதிப்போட்டியைப் பார்வையிட கபில் தேவ் மற்றும் தோனி போன்ற உலகக் கோப்பையை வென்ற வீரர்களை அழைக்காமல் ஜக்கி வாசுதேவ் போன்றோர்களை அழைத்தது ஏனோ?

– வே.சாக்கியமுனி, தாம்பரம்

பதில் 5: மோடி அரசோ பா.ஜ.க. காவிகளின் அரசு, அதில் வெற்றிக் கோப்பையை வென்றவர்களுக்கு ஏது இடம்; அவர்கள் காவி உடை அணியவில்லையே! விளையாடி தோற்றவர்கள் அனைவரும் காவி சீருடை அணிந்து விளையாடித் தோற்றவர்கள் என்றாலும்கூட!

கேள்வி 6: சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதத்தை சேர்க்க பரிந்துரை செய்துள்ளார்களே?

– ம.வேல்முருகன், விருதுநகர்

பதில் 6: “முழுக்க நனைந்த பிறகு முக்காடு ஏதுக்கடி குதம்பாய்?” என்றபடி, பகிரங்கமாய் அரசியல் சட்ட துஷ்பிரயோகத்திற்கு இனி ஏன் தயக்கம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 7: திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களை வைத்து நாயன்மார் சிலையை சுமந்துசென்று ஊர்வலம், கோவையில் மாட்டிறைச்சி சாப்பிட்டாயா என்று கேட்டு இஸ்லாமிய மாணவியை அடித்து அவமானப்படுத்திய ஆசிரியர் – பள்ளிக் கல்வித் துறையில்… இந்த ஹிந்துத்துவ போக்கு எங்கு போய் முடியும்?

– க.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம்

பதில் 7: 2024 பொதுத்தேர்தல் முடிவுகளில் போய் முடிவது உறுதி!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 8: கீழடி பற்றிய அமர்நாத் இராம கிருஷ்ணனின் ஆய்வறிக்கையை எப்போதுதான் வெளியிடுவார்கள்?

– சா.பரந்தாமன், வியாசர்பாடி

பதில் 8: யாருக்கும் பாருக்கும் தெரியாத பரம ரகசியம் போலும் அது!

கேள்வி 9: அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் வரும் போது எல்லாம் கொலை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் ராம்ரகீமிற்கு  பிணை வழங்கி வெளியே அனுப்புகிறார்களே?

– வ.பச்சைமுத்து, திருவள்ளூர் 

பதில் 9: அவர் மூலமாவது ஓட்டு வேட்டையாடி ஓட்டுப் பொறுக்க முடியுமா என்பது ஒரு காரணமாக இருக்கக் கூடும்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 10: அறநிலையத்துறை, ஆவின் ஆகிய இரண்டைப் பற்றியும் பா.ஜ.க. மற்றும் அதற்கு ஆதரவான சில கட்சிகளால் அதிகம் வதந்தி பரப்பப்பட்டு வருகிறதே?

– அ.சாவித்திரி, வேளச்சேரி

பதில் 10: வதந்தி பரவினாலும் வதந்தியின் சாயம் விரைவில் வெளுத்துவிடும்.

கேள்வி 11: அருகில் உள்ள ராஜஸ்தானில் காங்கிரஸ் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்துவதில்லை என்று கூறும் மோடி இதையே அடுத்த மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் கூறுவதில்லையே, ஏன்?

– ம.கவிவேந்தன், மயிலை

பதில் 11: “என் வீட்டில் நடந்தால் அது கல்யாணம். எதிர்வீட்டில் நடந்தால் அது எனக்கு இழவு” என்ற தத்துவம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *