வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

1 Min Read

அரசியல்

சென்னை. அக் 25 –  வாக்காளர் பட்டி யல் திருத்த பணி வரும் 27-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற் கும் ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று நடைபெற்றது. 

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத் தலின்படி, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அன்றைய நாளே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்குகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயல கத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.

இதில், பாஜக, காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி ஆகிய தேசிய கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மாநில கட்சிகள் பங்கேற்றன.

தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் வரும் நவம்பர் மாதத்தில் இரண்டு சனி, ஞாயிறுகளில் (நவ.4, 5, 18, 19) நடைபெற உள்ளன.

இதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், உயிரிழந்த வர்கள் பெயர் நீக்கம் தொடர்பான பரிந் துரைகளை இன்றைய கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வழங்கினர். அதன் அடிப்படையில், உரிய நட வடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *