சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பதா? – அமைச்சர் க.பொன்முடி கேள்வி!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசு, தமிழ்நாடு

சென்னை, அக். 26 – தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால், கம் யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும்என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி வலியுறுத் தியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு மருது சகோத ரர்கள் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர்களை தமிழ்நாடு அரசு  மறந்துவிட்டதாகக் குற்றம்சாட்டி பேசினார்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி நேற்று (25.10.2023) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழ்நாட்டின் சுதந்தி ரப் போராட்ட வீரர் களை தி.மு.க. நினைவு கூரத் தவறியதாக, தமிழ் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாறு அனைத்தும் தெரிந்தவர் போல, ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து கூறியிருக் கிறார்.

அதற்கான பதிலை, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்றே தெரிவித் துள்ளார்.

தமிழ்நாட்டின் சுதந் திரப் போராட்ட வீரர் கள் மேல் அக்கறை உள் ளவர் போல பேசுகிற தமிழ்நாடு ஆளுநர், ஊட கங்கள் வழியாக நான் அளிக்கும் பேட்டியை நிச்சயமாக கேட்பார் என்று கருதுகிறேன். 

ஆளுநருக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது அக்கறை இருக்குமா னால் மதுரை பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிமன்ற பேரவைக்குழு இரண்டும் சேர்ந்து, ஆட்சிக்குழு வின் மூலமாக 18.8. 2023 அன்றும், ஆட்சிமன்ற பேரவைக்குழுவில் 20.9.2023இலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு ஒரு பரிந் துரை அனுப்பி வைக்கப் பட்டது.

அது அந்தப் பல் கலைக்கழகத்தின் சட்ட விதியின்படி, ஆட்சி மன்ற பேரவைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டால், கவுரவ டாக் டர் பட்டம் வழங்க வேண்டும். ஆனால், அதற்கு வேந்தரின் கையெழுத்தும் தேவை என சட்ட விதிகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.

சங்கரய்யா மிகச் சிறந்த சுதந்திர போராட்ட வீரர். கல்லூரி படிப்பையே இழந்து 9 ஆண்டுகள் சிறையில் வாடி இருக் கிறார். அதோடு இரண்டு ஆண்டுகள் தலைமறை வாக இருந்து போராடி யவர்.

அவருடைய வர லாற்றை பார்த்து தெரிந்து கொண்டாவது ஆளுநர், இதில் கையெ ழுத்திட வேண்டும்” எனத் தெரிவித்திருக் கிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *