12.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதி ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 2024 செப்டம் பருக்குள் தேர்தலை நடத்த உத்தரவு.
* 8 நாள் இழுபறிக்கு பின்னர் தீர்வு – ம.பி. புதிய முதலமைச்சர் மோகன் யாதவ்: சிவராஜ்சிங் சவுகான் அவுட் – 2 துணை முதலமைச்சர்கள் நியமனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற அரசு முடிவு. திருத்தங்கள் செய்து மீண்டும் தாக்கல் செய்ய முடிவு.
தி இந்து:
* ஜம்மு காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கம் மற்றும் அதன் தரம் தாழ்த்தப்பட்டதை நிலைநிறுத்துவதில், இந்திய உச்ச நீதிமன்றம் மாநிலங்களின் உரிமைகளை சீர்குலைத்து உள்ளது – மற்றும் யூனியனின் அதிகார வரம்புகளை பலவீனப்படுத்தியுள்ளது என்கிறது தலையங்க செய்தி.
* “தந்தை பெரியார் சமூக நீதி விருது 2022” திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனுக்கு வழங்கப்படு வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் – வகுப்புவாதிகளை இன்றள வும் அச்சுறுத்தும் பெரியாரின் பெயரை எங்கும் எப்போதும் பயன்படுத்துவோம்: மு.க.ஸ்டாலின் டிவிட்.
* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி வழங்கு வதில் பாரபட்சம் காட்டும் மோடி அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment