நூற்றாண்டு கடந்தும் வாழ்க….
பகுத்தறிவு போராளியாகிய தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆம் ஆண்டு பிறந்தாள் மலர் 2023 – மகளிர் சார்பில் வெளிவந்த மலரினை படித்தேன்.
தாங்கள் எழுதிய உலக மகளிர் நாள் சிந்தனைகள் கவிதை சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
தங்களின் ஞாபக சக்தியினைப்பற்றி அம்மா மோகனா அம்மையாரே வியந்திருப்பதாக அவரது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்கள். அம்மா அவர்கள் தங்களைப் பற்றி சிறுதுளிகூட சங்கடப்பட்டதில்லை என்று நினைக்கும்போது அப்பப்பா தாங்கள் இருவரும் குடும்ப வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறீர்கள். எங்களைப் போன்ற சாதாரண மக்களும் பெருமகிழ்ச்சியாக வாழ்ந்திட அம்மாவின் பேட்டி அமைந்திருக்கிறது.
தங்களைப்பற்றி பேரா.உ.பர்வீன் அம்மாவின் கட்டுரையில் “பெரியாரிய பெண்ணியத்திற்கு வரை படம் தந்தார்” என்று அழகாக குறிப்பிட்டுள்ளார்.
அன்புமதி கலி. பூங்குன்றன் அவர்கள் குறிப் பிட்டது போல கடிகாரமுள்கூட ஓடத்தவறிடும் தங்கள் கால்களோ என்றுமே ஓடிக் கொண்டிருக்கிறது.
கவின் அன்புராஜ் அவர்களின் நீங்கள் -நான்-நாம் அறிந்த அய்யா கட்டுரை சிறப்போ சிறப்பு: கழகத் துணைத் தலைவர் கவிஞர் அய்யா எழுதியது போல் நூற்றாண்டுக் கடந்து வாழ்வீர்கள் என்ற நம்பிக்கை யுண்டு.
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியினை எழுத்தாய் கொட்டியுள்ளார்கள்.
அகிலா எழிலரசன் அவர்களின் ஆங்கில கட்டுரை அற்புதம்.
மானமிகு மனிதநேயர் தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்களே! சோர்வறியா தோழன் என்று நன்றிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்
தாங்கள் நீடூழி வாழவேண்டும் என எங்கள் குடும்பத்தின் சார்பிலும், எமது பிரவுசர் புத்தக உலகம் சார்பிலும் வாழ்த்துகிறோம்.
இந்த சிறப்பான மலர் அமைவதற்கு காரணமான அத்துணை நல் உள்ளங்களுக்கும் எனது தாழ்மை யான வணக்கத்தையும், நன்றியையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
– மணிமொழி குணசேகரன்,
பிரவுசர் புத்தக உலகம், தஞ்சாவூர்