இராசபாளையம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் இரா. கோவிந்தன் – கார்த்திகை மயில் இணையரது மகன்
கோ. பிரபாகரன் – சிவசக்தி மணவிழா 10.12.2023 அன்று திருவல்லிபுத்தூரில் நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி, இராசபாளையம் மாவட்டத் தலைவர் பூ. சிவக்குமார், விருதுநகர் மாவட்ட தலைவர் பெ.நல்லதம்பி, விருதுநகர் மாவட்ட செயலாளர் தி. ஆதவன், இராசபாளையம் நகர தலைவர் இரா. பாண்டிமுருகன், வானவில் ம. கதிரவன் மற்றும் கழகத் தோழர்கள் நேரில் பங்கேற்று வாழ்த்தினர். மணவிழா நடைபெற்றதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடையாக மண மக்கள் வழங்கிய ரூ.5 ஆயிரத்தை தலைமைக் கழக அமைப் பாளர் இல. திருப்பதி தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
மணமக்கள் கோ.பிரபாகரன் – சிவசக்தி நன்கொடை
Leave a Comment