டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
• ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (11.12.2023) தீர்ப்பு வழங்குகிறது.
• திரிணாமுல் காங்கிரஸ் மஹூவா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதில் எந்தவித நியாயமும் இல்லை. சி.பி.அய். விசாரணை நடத்தி ஒரு மாதமாகியும் இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட வில்லை என்கிறது தலையங்க செய்தி.
• பீகார் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியுடன், இட ஒதுக்கீடு சதவீதத்தையும் அதிகப்படுத்திட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நிதிஷ்குமார் கோரிக்கை.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
• சேலத்தில் டிசம்பர் 24 நடைபெறும் தி.மு.க. இளை ஞரணி மாநாடு, பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமான மாநாடாக அமையும்.
• பொங்கல் பரிசாக வழக்கமாக அளிக்கப்படும் அரிசி, பருப்பு வகைகள் உள்ளிட்டவையோடு ரூ.1000 உதவிப் பணமும் அளிக்க தி.மு.க. அரசு முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• டில்லியில் வரும் 19ஆம் தேதி “இந்தியா” கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, ‘நான் அல்ல, நாம்’ என்கிற முழக்கம் அறிவிக்கப்பட உள்ளது.
தி டெலிகிராப்:
• நம் நாட்டில் தினமும் 158 தாழ்த்தப்பட்டவர்களும், 28 ஆதிவாசி களும் தாக்கப்படுகின்றனர். 2022இல் மூத்த குடிமக்களுக்கு எதிராக 28,545 குற்றங்களும், 2,878 குழந் தைகள் கடத்தப் பட்டும் உள்ளனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மனித உரிமைகள் தினத்தில் பேச்சு. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அமைதி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
• பி.எஸ்.பி. கட்சியில் தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை மாயாவதி அறிவித்தார்.
– குடந்தை கருணா