நமது வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன. அம்மூன்று முட்டுக்கட்டைகள் என்ன?
1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும்.
2. முன்னோர்கள் எழுதியபடி நடக்க வேண்டும்.
3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் – என்பவைகளாகும்.
இவை, முட்டுக்கட்டைகள் என்று சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொன்னாரா, இல்லையா? அதற்குப் பிறகு இன்று – இந்த இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக வாழும் கருஞ்சட்டைக்காரர்களன்றி வேறு யார் சொல்கிறார்கள்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’