10.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
• தெலங்கானா முதலமைச்சருக்கு உள்துறை மற்றும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு – தேர்தல் வாக்குறுதி களில் இரண்டு வாக்குறுதிகள்: பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ;10 லட்சமாக உயர்வு என ஆணை பிறப்பித்தார் ரேவந்த்.
றீ மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 வெள்ள நிவாரணம்; பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• மஹூவா எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் கடும் எதிர்ப்பு. மோடி அரசு செய்ததையும், இந்த விடயத்தில் நடந்துகொண்ட விதத்தையும் கண்டிக்க பெண்களாக ஒன்றிணைய முடியா விட்டால், நமக்குப் பின் வரும் தலைமுறைப் பெண்களுக்கு, பொது வாழ்க்கைக்கு வர வேண்டும் என்ற கனவில் இருக்கும் பெண்களுக்கு, நமது மவுனம் ஒரு கொடிய பொறியாக அமையும் என அறிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவது வாக்காளர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த கோரிக்கை. அமெரிக்கா போன்ற நாடுகள் கூட மின்னணு இயந்திரங்களை பயன்படுத்தவில்லை என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் பேச்சு.
றீ மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சிறந்த சுகாதார அமைப்பு உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகிழ்ச்சி.
– குடந்தை கருணா