மதுரை, டிச. 10- குழந்தை மாயமானது தொடர்பான புகார்கள் வரும் போது உடனடியாக பெற்றோர் களின் மரபணு (டிஎன்ஏ) விவரங் களைச் சேகரித்து டேட்டா வங்கி யில் பாதுகாக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த கணவன், மனைவி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய் திருக்கின்றனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “எங்களுக்குக் குழந்தை இல்லை. ஒரு குழந்தையைத் தத் தெடுக்க முடிவு செய்து அதற்காக 1.8.2022இல் பதிவு செய்தோம். இந்நிலையில் திருமணமாகாத பெண் ஒருவருக்குப் பிறந்த ஆண் குழந்தை எங்களுக்குக் கிடைத்தது. அந்த குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் பெற முயன்றபோது சட்டப்படி தத்தெடுக்காமல் குழந் தையை வளர்த்து வருவதாக வி.கே. புரம் காவல்துறையினர் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் குழந்தையை மாவட்ட சமூகப்பணிகள் இயக்குநர் வசம் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி கோரி 3.3.2023இல் மனு அனுப் பினேன். அந்த மனு அடிப்படையில் குழந்தையை சட்டப்படி தத்தெ டுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந் தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப் பித்த உத்தரவு வருமாறு
“சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் குழந்தை தத்தெடுப்பு குறித்துக் கூறப்பட்டுள்ளது. மனு தாரர்கள் சட்டப்படியான குழந்தை தத்தெடுப்பு முறைகளைப் பின்பற்றவில்லை. இருப்பினும் அந்த குழந்தை 6 மாதமாக மனு தாரர்களின் பரா மரிப்பிலிருந்துள் ளது. குழந்தைகள் மாயமானது தொடர்பாக ஏராளமான புகார் கள் பதிவாகி வருகின்றன. குழந்தை மாயமானது என்பது தொடர்பான புகார்கள் வரும் போது உடனடி யாக பெற்றோர்களின் மரபணு (டிஎன்ஏ) விபரங்களைச் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க வேண்டும். குழந்தை மீட்கப்படும் போது குழந்தையின் டிஎன்ஏவுடன் டேட்டா வங்கியில் இருக்கும் பெற்றோரின் டிஎன்ஏ விபரங் களை ஒப்பிட்டுப் பார்த்து முடி வெடுக்க முடியும்.
இது தொடர்பாக உள்துறை செயலாளரும், ஏடிஜிபி (பெண் களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு)-ம் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண் டும். இந்த உத்தரவு நிறைவேற்றப் பட்டது தொடர்பாக உயர் நீதி மன்ற பதிவுத்துறையில் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும். இந்த வழக்கில் குழந்தை கடத் தப்படாவிட்டால் மனுதாரர்கள் குழந்தையை சட்டப்படி தத்தெ டுக்க அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் வி.கே.புரம் காவல் ஆய் வாளர் எதிரிகளுக்குச் அழைப் பாணை அனுப்பி விசாரணை நடத்தி உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும். விசாரணையை முடித்து 3 மாதத்தில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குழந்தை யைத் தத்தெடுக்கும் வகையில் மத் திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதிகளில் தளர்த்த வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.