சென்னை, டிச. 10 – காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள கடல்மங்கலம் என்ற ஊரில், பழைமையான கண்ணாடி மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களான, லுத்விஸ் ஜெனோமோ பென்சர், ரெபேக்கால், பவித்ரா, ஜெயசிறீ, அன்பரசி, மதுமிதா, அபிராமி ஆகியோர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொல்லியல் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அதில், உத்திரமேரூரில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் கடல்மங்கலம் என்ற ஊரில், கண்ணாடி மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்களை கண்டறிந்தனர். தொடர்ந்து ஆய்வு செய்ததில், மூன்று இடங்களில் இந்த தொழில் நடந்து உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து, மாணவர் லுத்விஸ் ஜெனோமோ பென்சர் கூறியதாவது: கடல்மங்கலத்தில் கள ஆய்வு செய்த போது, இடைக்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங் களின் சிதிலங்களும், பழைய, நுண் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளும் கிடைத்தன.
மேலும், ஆயிரக்கணக்கான கண்ணாடி மணிகள் பல வடிவங்களிலும், வண்ணங் களிலும் கிடைத்தன.
இந்த கண்ணாடி மணிகள் தயாரிப்பதற்கான உலை களை, அய்ந்து இடங்களில் கண்டறிந்தோம். அவற்றில் ஒன்று மட்டுமே நல்ல நிலையில் உள்ளது. இந்த உலைகள், இரட்டை சுவருடன் பானை ஓடுகள் நிரப்பப்பட்டதாக, வட்ட வடிவில் அமைந்துள்ளன. இவ்விடங்களில், சிவப்பு, கருப்பு – சிவப்பு பானை ஓடுகள் நிறைய கிடைக்கின்றன.
இதிலிருந்து, இந்த தொழிற்சாலை சங்க காலத்தில் இயங்கியதை அறிய முடிகிறது. சில ஓடுகளில் கண்ணா டியை சூடேற்றிய அடையாள மாக, கண்ணாடியின் தாது பூசப்பட்டுள்ளது. உலைகள் இருந்த இடத்தில், ஒரு காலத்தில் ஆறு ஓடியதற்கான தடயமாக, உலைகள் நீரால் அரிக்கப்பட்ட அடையாளம் தெரிகிறது. மணிகள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், அடர் ஆரஞ்சு வண்ணங்களில் கிடைத்து உள்ளன. மணிகள் தயாரிப்பின் போது உடைந்தவையும், தயாரிப்புக்கு முந்தைய மணிகளும் கிடைத்து உள்ளன. இந்த தாதுப்பொருட்களும், உலைக ளும் கிடைத்துள்ளதால், இந்த பகுதியில், 2,000 ஆண்டுக ளுக்கு முன், கண்ணாடி மணிகள் தயாரிக்கும் தொழில் நடந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.