பள்ளி கல்லூரிகள் நாளை திறப்பு மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்க முடிவு

2 Min Read

சென்னை,டிச.10- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங் கல்பட்டு ஆகிய 4 மாவட் டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நாளை (11.12.2023) முதல் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் கார ணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியி ருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகு வாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேக மாக நடைபெற்று வருகின் றன. வெள்ளத்தால் பாதிக் கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின் றது. பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு பல்வேறு அமைப் பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நகரின் பல் வேறு பகுதிகளில் தற்போது வரை வெள்ளம் வடிய வில்லை. மேலும் பல பகுதி களில் மின்சாரமும் துண் டிக்கப்பட்டுள்ளது. இத னால் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பாதிக் கப்பட்டன. இந்த பள்ளி களை சீரமைக்க ரூ.1 கோடியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கியது.

இந்த நிலையில் மழை பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி களுக்கு கடந்த 4-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப் பட்டிருந்தது.

எனவே மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூ ரிகள் மீண்டும் 11-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள் ளிகள், கல்லூரிகள் திறக்கப் படவுள்ளன. எனவே பள்ளிகளின் சீரமைப்பை விரைந்து முடிக்க அறிவு றுத்தப்பட்டுள்ளது.
புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகம், சீருடை வழங்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங் கல்பட்டு ஆகிய 4 மாவட் டங்கள் கடுமையாக பாதிக் கப்பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *