சென்னை, அக்.27 ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தை பாஜகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பிணையில் எடுத் துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறிப்பிடும்போது, “ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய பாட் டிலை வீசிய புகாரில் கைது செய் யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கெ னவே பல வழக்குகள் இருக் கின்றன. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக் குரைஞர் பா.ஜ.க.வில் இருப்ப தாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பாஜக அலுவலகம் முன்பு இதேபோல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்குரை ஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்பு கிறது. இந்தக் கோணத்திலும் தமிழ்நாடு காவல் துறை தீவிர மாக தனது விசாரணையை விரிவு படுத்தி இருக்கிறது” என்று அமைச் சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கருக்கா வினோத் ஏற்கெ னவே பாஜக அலுவலகம் முன்பு தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சிறை சென்றிருந்தார். அந்த வழக்கில் இருந்து வினோத்தை பிணையில் எடுத் தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்குரைஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என்று சொல்லப் படுகிறது. இதையடுத்தே அமைச் சர் ரகுபதி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத் துள்ளார்.
ஆளுநர் மாளிகை நுழை வாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருக்கின்றன. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக் குரைஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.