9.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தற்காலிக அவைத்தலைவர் இஸ்லாமியர். அவரிடம் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்க மாட்டேன், பாஜக எம்.எல்.ஏ. அகம்பாவ பேச்சு.
* அதானியின் ரூ.13,000 கோடி முறைகேட்டை பற்றி கேள்வி கேட்ட திரிணாமுல் பெண் எம்.பி. பதவி பறிப்பு: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு, கடும் கண்டனம்.
* முழுமையாக வாய்ப்பு தராமல் மகுவா எம்.பி. பதவி பறிப்பு; பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு மக்கள் மன்றம் தீர்ப்பளிக்கும், மம்தா ஆவேசம்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* உபதேசம் செய்யாதே, தீர்ப்பை மட்டும் வழங்கு, கல்காத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றம் கண்டிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆளுநர்களை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க அரசியல் சட்ட திருத்தப்பட வேண்டும்: மாநிலங்களவையில் சிபிஎம் எம்.பி சிவதாசன் பேச்சு.
* 2024 பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்கிறார் அரசியல் விமர்சகர் யோகேந்திர யாதவ்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கருநாடகாவில் இருந்து சோனியா காந்தியை மாநிலங்களவைக்கு பரிந்துரைக்க காங்கிரஸ் தலைமைக்கு கருநாடகா காங்கிரஸ் யோசனை.
தி இந்து:
* உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தி சரி செய்ய வேண்டும், காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் மாநிலங்களவையில் கோரிக்கை.
தி டெலிகிராப்:
* பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) அறிக்கை
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment