மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (9.12.2023) தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களில் நடைபெறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைக்கும் விதமாக, கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை கோதாமேடு ராஜ் திரையரங்கம் அருகில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.