சென்னை, டிச. 9- சென்னையில் நேற்று (8.12.2023) 444 லாரிகள் மூலம் 4,227 நடைகள் பாதுகாக் கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில், “சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 07.12.2023 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதி களில் பெரு வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 42 நீர் நிரப்பும் நிலையங்களிலிருந்து 444 லாரிகள் மூலம் 4,227 நடை கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
மேலும், குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநி யோகம் அனைத்துப் பகுதிகளி லும் சீராக வழங்கப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட பகுதிகள் மற்றும் தமிழ் நாடு நகர்ப்புர வாழ்விட மேம் பாட்டு வாரியத்தின் குடியிருப்பு களில் வசிக்கும் மக்களுக்கு லாரி கள் மூலம் நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநக ராட்சிப் பகுதிகளில் செயல் படக்கூடிய 74 நிவாரண முகாம் களுக்கு தேவையான குடிநீர் மற்றும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு தயாரிக்கும் கூடங்களுக்குத் தேவையான குடிநீர் சென்னை குடிநீர் வாரியத்தால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மழைநீர் தேங்கி யுள்ள பகுதிகளில் 116 அதிவேக நீர் உறிஞ்சும் இயந்திரங்களைக் (Super Sucker Machines) வெளியேற்றுவதோடு, பிரதான கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்புகளை 476 தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் ஜெட் ராடிங் இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது.
மழைநீர் தேங்கிய 263 இடங் களில் மோட்டார்களைக் கொண்டு மழை நீர் அகற்றப்பட்டது. மேலும், 325 கழிவுநீர் உந்து நிலையங்களில் 179 ஜெனரேட் டர்களைக் கொண்டு தொய்வில் லாமல் 24 மணி நேரமும் செயல் படும் வகையில் கழிவுநீர் அகற்றும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புக ளுக்கும் இதுவரை 45 இலட்சம் குளோரின் மாத்திரைகள் வழங் கப்பட்டுள்ளது. மேலும் மழைக் காலங்களில் பொதுமக்கள் குடி நீரைப் காய்ச்சிப் பருகவும் அறி வுறுத்தப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநக ராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடி நீர் வழங்கும் பொருட்டு தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதிக் கப்பட்டுவரும் நிலையில் தற் போதைய வடகிழக்குப் பருவ மழையின்போது நாளொன் றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப் படுகிறது.
மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வாயிலாக லாரி கள் மூலம் குடிநீர் பெற பொது மக்கள், கட்டணமில்லா தொலை பேசி எண்.1916 மற்றும் 044-4567 4567 (20 இணைப்புகள்) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். தெரு நடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கு இலவச மாக குடிநீர் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.