சென்னை, அக்.27 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அக்.31இ-ல் கூடுகிறது. தமிழ்நாடு தொழில் துறை சார்பில் சென்னையில் வரும் 2024 ஜன.7, 8-இல் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்க உள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை வரும் அக்.31ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. இதில், புதிய முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு விவகாரம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.