சென்னை, அக். 27- சிபி எஸ்இ பாடப்புத்தகங்க ளில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் இனி பாரத் என்ற வார்த் தையை மாற்ற என்.சி.இ. ஆர்.டி. குழு பரிந்துரை செய்துள்ளது. 12ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை சேர்க்க என்சி இஆர்டி ஒப்புதல் வழங்கி யுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிக ளில் சமூக அறிவியல் பாடத்தை மாற்றி அமைப்பது குறித்து என். சி.இ.ஆர்.டி. குழு ஆய்வு செய்தது. ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி இந் தியாவுக்கு பதில் பாரத் என பயன்படுத்த பரிந் துரை செய்யப்பட்டிருக்கி றது.
சிபிஎஸ்இ பள்ளிக ளில் வரலாறு பாடங்கள் மாறுகின்றன:
பண்டைய வரலாறு என்பதற்கு பதில் செவ்வி யல் வரலாறு பாடத்திட் டத்தை அறிமுகப்படுத்த வும், அனைத்து பாடப் புத்தகங்களிலும் “இந்திய பாரம்பரிய அறிவு” என்ற பெயரிலும் புதிய பாடத்தை அறிமுகப்படுத்த என்.சி. இ.ஆர்.டி. குழு பரிந்துரை செய்துள்ளது. எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரண்டு “இந்தியா” கூட் டணி உருவாக்கிய பிறகு நாட்டின் பெயரை பாரத் என பயன்படுத்த பாஜக தொடங்கியது.
ஏற்கெனவே ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்தியாவுக்குப் பதில் பாரத் என பயன்படுத்தப் பட்டது சர்ச்சையானது. ஜி20 மாநாட்டில் பிரத மர் மோடியின் மேஜை யில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைத்ததற்கும் எதிர்ப்பு எழுந்தது. நாட் டின் பெயரை மாற்ற மோடி அரசு திட்டமிடு வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பாட நூல்களில் பாரத் என மாற்ற பரிந்துரை செய்யப் பட்டிருக்கிறது.
பள்ளி பாடநூல்களில் பாரத்?: கல்வியாளர்கள் கண்டனம்
சிபிஎஸ்இ பாடப்புத் தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத் என மாற்றும் பரிந்துரைக்கு கல்வியா ளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தரவுகளை வைத்துக் கொண்டு மட் டுமே வரலாற்றை எழுத முடியாது என பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார். வர லாற்றை மறைத்துவிட்டு பழங்கால இந்தியாவில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கட்டமைக்க முயற்சிக் கிறார்கள் என்றும் கூறி யுள்ளார்.
வரலாறு பற்றிய மோசமான பார்வையை எல்லோரிடமும் பார்க்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. மோசடியாக அரசியல் சாசன உணர்வை மதிக் காமல் தங்களின் எண் ணத்தை மாணவர்களின் சிந்தனை மீது திணிக் கிறார்கள். வேதங்களின் சிந்தனையை பல மதங் கள் கொண்ட இந்தியா வில் பாடப்புத்தகங்கள் மூலம் திணிக்கப் பார்க் கிறார்கள். புராண கட் டுக்கதைகளை வரலாறு என பள்ளிக் குழந்தை களின் சிந்தனையில் பாஜக திணிக்கப் பார்க் கிறது என்றும் மார்க் சிஸ்ட் கடுமையாக சாடி யுள்ளது.