வேளச்சேரி வெள்ளம்… அண்ணாமலையிடம் சீறிய பெண்!
சென்னை, டிச.8 சென்னை வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற பா.ஜ.க. தலைவர் அண்ணா மலையிடம் பெண் ஒருவரும் பின்னர் அங்கிருந்த பொதுமக்க ளும் கோபமாகப் பேசிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேளச்சேரி பகு தியில் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட இடங்களுக்கு நேரடி யாகச் சென்று உணவு கொடுத்து வருவதாக பாஜக தெரிவித் துள்ளது.
அண்ணாமலையை மறித்த பெண்
இந்நிலையில் சென்னை வேளச் சேரியில் உணவு கொடுக்கச் சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெண் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
‘‘நாங்க சொல்றதை எங்கே யாவது கேட்குறீங்களா? யாராவது நின்று எங்கள் பேச்சை கேட்கு றீங்களா? நீங்க பாருங்க நான் கொடுத்த கோரிக்கையை கூட படிக்கவில்லை. ஆனால் கிளம்பி செல்கிறீர்கள். மாறி மாறி நீங்கள் போட்டோதான் எடுக்கிறீர்கள்.
என்னுடைய பிரச்சினையை உங்களிடம் சொல்ல வருகிறேன், ஆனால், கேட்காமல் உள்ளீர்கள்” என்று அந்த பெண் கூறியுள்ளார்.
அதைக் கேட்ட அண்ணாமலை -_ நீங்கள் முதலில் சாப்பிடுங்கள். அப்புறம் பேசலாம். உங்களுக்காக சாப்பாடு கொண்டு வந்திருக்கி றோம். உங்களுக்காக சாப்பாடு இருக்கிறது. முதலில் அதை சாப் பிடுங்கள். அப்புறம் கட்சி நிர் வாகிகள் உங்களிடம் கோரிக்கை களைக் கேட்பார்கள். கண்டிப்பாக உங்களிடம் கட்சி நிர்வாகிகள் பேசுவார்கள் என்று கூறியுள்ளார்.
சாப்பாடு வேண்டாம்
இதைக் கேட்ட அந்தப் பெண் மணி, ‘‘நாங்கள் வைக்கும் கோரிக் கையை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். ஆனால், இப்போது சாப்பாடு மட்டும் போடுவீர்களா.. உங்கள் சாப்பாடும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்.. நீங்கள் செல்லுங்கள்” என்று கடுமையாக பேசியுள்ளார்.
இளைஞர் கோபம்
அங்கே இருந்த இளைஞர் ஒருவர்.. ‘‘வெறும் 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வருகிறார்.. எப்படி போதும்? இங்கே 1500 வீடுகள் இருக்கு.
50 பேருக்கு சாப் பாடு கொண்டு வந்துட்டு நான் உதவி செஞ்சிட்டேன் அப்படின்னு சொல்லிக் கிறாங்க? இது எல்லாம் எப்படிங்க போதுமானதாக இருக்கும்? நீங்களே சொல்லுங்கள். இங்கே அத்தனைப் பேர் சாப்பிடாமல் இருக்கோம். ஆனால், இவங்க பாருங்க போட்டோ எடுக்குறாங்க” என்று கோபமாக பேசி உள்ளார்.
சென்னை வெள்ளம்
பொதுவாக சென்னை முழுவ தும் 3.12.2023 அன்று பெய்த மழைக்கு சென்னை 4-5 நாள்களுக்கு மிதந்து இருக்கும்.சென்னையே மொத்த மாக முடங்கி இருக்கும். ஏனென் றால் இது 2015அய் விட மோசமான வெள்ளம். 2015அய் விட மோச மான மழை. ஆனாலும், சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந் தது.
பல பகுதிகள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே கார ணம்.. இந்த வடிகால் அமைப் புகள்தான்.
இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிகக் கடுமையான சூழ் நிலையில் சிக்கித் தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கித் தவித்து வரு கின்றனர்.