தமிழ்நாட்டில் புயல் வெள்ளம் பெரும் பாதிப்பு
தமிழ்நாடு அரசு கேட்டது ரூபாய் 5,060 கோடி
ஒன்றிய அரசு கொடுப்பதோ நிலுவைத் தொகை ரூ.450 கோடி மட்டும்தான்
சென்னை,டிச.8- புயல் மழை சேதம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஒன் றிய அரசு ரூபாய் 450 கோடி வழங் குவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
கடுமையான பாதிப்பு வங்கக் கடலில் உருவான மிக் ஜம் புயலினால் கடந்த 2. 3 மற்றும் 4ஆம் தேதிகளில் கமைழை பெய் தது அதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்க ளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
கடந்த 5.12.2023 அன்று பிரத மர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அதில், தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரண மாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமை யான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட் கட்டமைப்புகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும், இலட்சக்கணக் கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப் பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங் கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பிரதமர் மோடியைக் கேட்டுக் கொண்டார்.
மேலும், ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள் ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவ £ன சேத அறிக்கை தயார் செய் யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேதமடைந்த பகுதிகளைப் பார் வையிட ஒன்றிய அரசின் குழு வினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கோரியிருந்தார்.
எக்ஸ் வலைதள பதிவு இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (7.12.2023) காலையில் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் 2 பதிவுகளை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டு இருப்பதா வது:-
பெரு வெள்ளங்களை சென்னை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 8 ஆண்டு களில் இது (மிக்ஜம் புயலினால் ஏற்பட்ட வெள்ளம்) 3-வதாகும். பலத்த மழையை பெறும் பெருநகரங்களில், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை நாம் கண்டு வருகிறோம்.
இதை பிரதமர் மோடியின் நேர்மறையாக அணுகுகிறார். இதற்கு தீர்வு காண, பிரதமர் மோடி, முதல் நகர்ப்புறவெள்ளத் தணிப்பு திட்டத்திற்கு தேசிய பேரி டர் தணிப்பு நிதியத்தின் (என்.டி. எம்.எப்.) கீழ்,
சென்னை பகுதி ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக ரூ 561.29 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் ஒன்றிய அரசின் உதவி நிதி ரூ.500 கோடி அடங்கும்.
இந்த பேரிடர் தணிப்பு திட்டம், சென்னை வெள்ளத்தை தாக்குப் பிடிக்க உதவும். நகர்ப்புற வெள்ளத் தணிப்பு முயற்சிகளில் இது முதன்மையானதாகும். மேலும், நகர்ப்புற வெள்ள மேலாண்மைக் கான கட்டமைப்பை உருவாக்கவும் இது உதவும்.
மிக்ஜம் சூறாவளி புயல், தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தை கடுமையாக பாதித்து இருக்கிறது. சேதங்களின் அளவு வேறுவேறாக இருந்தாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன. புயலினால் பாதிக்கப் பட்ட இந்த 2 மாநில அரசுகளுக்கும் உதவும் வகையில் ஒன்றிய உள் துறைக்கு பிரதமர் மோடி உத்தர வுகளை பிறப்பித்துள்ளார்.
மாநில அரசுகள், தேவை யான நிவாரணங்களை நிர்வகிப்பதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதிக் கான (எஸ். டி.ஆர்.எப்.), 2ஆவது தவணையின் ஒன்றிய அரசின் பங்கான ரூ.450 கோடியை முன் கூட்டியே தமிழ்நாட்டிற்கும், ரூ.493.60 கோடியை ஆந்திர பிர தேசத்திற்கும் வழங்க அவர் உத் தரவிட்டுள்ளார். அதே அளவு தொகையை முறையே 2 மாநிலங் களுக்கும் ஒன்றிய அரசு ஏற்கெ னவே விடுவித்துள்ளது.
புயல்வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட அனைவரும் நலம் பெறு வதற்கும், அவர்களின் பாதுகாப் பிற்கும் நான் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கி றோம். இந்த சூழ்நிலை மாறி மிக விரைவில் இயல்புநிலை திரும்பும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.