வரப்போகும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள். அதற்குத்தான், ‘யார் வர வேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம்’ என்று நம்முடைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அருமையாக விளக்கம் கொடுத்திருக் கிறார். ‘இந்தியா’ கூட்டணியில் இருப்பவர்கள் எல் லோரும் தீயணைப்பு வீரர்கள் தான். எங்களில் இவர் வெள்ளை சட்டை போட்டிருப்பார்! நான் கருப்புச் சட்டை போட்டிருப்பேன்! இவர் சிவப்புச் சட்டை போட்டிருப்பார்! இன்னொருவர் நீலச்சட்டை போட்டி ருப்பார். இன்னொருவர் நாமம் போட்டிருப்பார்! மற்றுமொருவர் விபூதி பூசி இருப்பார்! எல்லோரும் சேர்ந்து ஆளாளுக்கு மணல் கொண்டு வந்து போடணும், தீயணைக்க வேண்டும், அவ்வளவுதான். வேறு யாராவது மணலுக்குப் பதிலாக பெட்ரோலை கொண்டு வருகிறார்களா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, வேறில்லை. இந்த வீட்டுக்குத்தான் தீ வந்திருக்கிறது என்று கடைசி வீட்டுக்காரர் நிம்மதி யாக இருக்க முடியாது. தீயணைப்பது மட்டுமல்ல, இந்த அணிதான் மதவெறித் தீ, ஜாதிவெறித் தீ, பதவி வெறித் தீ… அத்தனையையும் முடிவுக்குக் கொண்டு வரும்.
மதவெறித் தீ, ஜாதிவெறித் தீ, பதவிவெறித் தீ… அத்தனையையும் முடிவுக்குக் கொண்டுவரும் அணி!
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
