25.11.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
*ஹிந்துயிசம் என சொல்லக் கூடாது. ஸநாதனத்தைப் பாதுகாக்கும் ஹிந்துத்வா என்பதே சரி – பாங்காங்கில் நடந்த உலக ஹிந்து மாநாட்டில் முடிவு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
*ஹிந்து கோயில் சொத்துக்கள் ரூ.5500 கோடியை மீட்ட தி.மு.க. மீது குற்றம் சுமத்துவதா? ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
*எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மோடி அரசு பலவீனப்படுத்த நினைக்கிறது. 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அழைப் பாணை அனுப்பியதை எதிர்த்து தமிழ் நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
*சென்னை மதுபான விடுதியில் பெண்ணை துன்புறுத்தியதான குற்றச்சாட்டில், நியூஸ் தமிழ் 24ஜ்7 ஊடக செய்தியாளர் மற்றும் அய்ந்து பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு.
தி இந்து
*மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பஞ்சாப் அரசின் வழக்கின் தீர்ப்பை படிக்குமாறு கேரள ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
*அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 21 மொழிகளிலும் யு.பி.எஸ்.சி. தேர்வு நடத்திட வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு.
தி டெலிகிராப்
*மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து விவசாயிகள், தொழிலாளர்கள் நவம்பர் 26 முதல் 28 வரை, மூன்று நாள் போராட்டம் – சம்யுக்தா கிசான் மோர்ச்சா, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் முடிவு.
டைம்ஸ் ஆப் இந்தியா
*தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டு – மேனாள் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் நட்ராஜ் மீது பிணையில் வெளியில் வர முடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
*பீகார் மட்டுமல்ல, இந்திய அரசியலில் நிதிஷ் குமார் ஓபிசி முகமாக விளங்குகிறார் என பீகார் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா பெருமிதம்.
– குடந்தை கருணா