சென்னை, டிச.8- மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மின்சாரம் துண்டிக்கப் பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை துணிவுடன் வழிநடத்தி வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன். அதோடு இந்தப் புயல் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனது சகோதரர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை துணிச்சலுடன் முன் னெடுத்துச் செல்கிறார். அவருக்கும், பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழ் நாடு மக்களுக்கும் எனது ஒத்து ழைப் பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆந் திராவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.”
-இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.