காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன : மம்தா கருத்து

1 Min Read
தமிழ்நாடு

தீகால்கத்தா,டிச.6- மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தற்கான காரணம் குறித்து, மேற்கு வங்க முதலமைச்சரும், திரிண மூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா  கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்தியா” கூட்டணி

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மாநி லங்களில் பாஜகவிடம் காங் கிரஸ் ஆட்சியை பறிகொடுத் தது. இந்த தேர்தல் தோல்வி யானது காங்கிரஸ் தலைமை வகிக்கும் “இந்தியா” கூட்டணி கட்சியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது. இந்நிலையில் “இந்தியா” கூட்டணியில் உள்ள திரிண மூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா  தேர்தல் முடி வுகள் தொடர்பாக கூறிய தாவது:

தெலங்கானாவில் காங் கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தானிலும் காங்கிர ஸால் வெற்றி பெற்றிருக்க முடியும். 

“இந்தியா” கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டியிட்டதால் வாக் குகள் பிரிந்துவிட்டன. இது தான் உண்மை. தேர்தலில் உரிய பங்கீடுகளை செய்யு மாறு நாங்கள் அறிவுறுத்தி யிருந்தோம். வாக்குகள் சிதறியதாலேயே காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது. சித்தாந்தத்துடன், வியூகமும் தேவை. 2024 தேர்தலில் “இந்தியா” கூட்டணி கட்சிக ளிடையே உரிய தொகுதி பங்கீடு ஏற்படுமேயானால் நிச்சயமாக பாஜகவால் மீண் டும் ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலின்போது நாங்கள் இணைந்து, தவறுகளை சரி செய்து போட்டியிடுவோம்.இவ்வாறு மம்தா  தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *