தஞ்சைக்கு வருகிறது விமான நிலையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முயற்சி

2 Min Read

அரசு, தமிழ்நாடு


சென்னை, டிச. 3- 
தஞ்சாவூரில், 200 கோடி ரூபாயில், விமான நிலை யம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை துரிதப்படுத்த, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார்.

தஞ்சாவூரில் பாதுகாப்புத் துறை விமான நிலையம் அருகே, 200 கோடி ரூபாய் செலவில், பயணியர் விமான நிலையம் அமைக்கப்பட உள் ளது.

தஞ்சாவூரில் தற்போது இருக்கும் விமான நிலையம், இந்திய விமானப்படைக்கு சொந்தமானது. அதில், இரண்டு ஓடு பாதைகள் உள்ளன.

விமானப்படை வசம், 56.16 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 26.5 ஏக்கர் நிலத்தை, பயணியர் விமான நிலையத்திற்கு பயன் படுத்த, இந்திய விமான நிலை யங்கள் ஆணையம் திட்ட மிட்டு உள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு டிச., 1இல், இந்திய விமானப் படை, இந்திய விமான நிலை யங்கள் ஆணையம் இடையே, நிலத்தை பரிமாறிக் கொள்வ தற்கான புரிந்துணர்வு ஒப்பந் தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில் நிலம், இந்திய விமான நிலை யங்கள் ஆணையத்திடம் ஒப் படைக்கப்பட்டு உள்ளது.

இந்த இடத்தை, சமீபத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, டிட்கோ மற்றும் மாவட்ட நிர்வாக அதி காரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தார். விமான நிலை யத்திற்கான ஆயத்த பணிகளை விரைவுப் படுத்தும்படி, மாநில அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

விமான நிலையம் அமைய உள்ள பகுதிக்கு, நான்கு வழிச் சாலை அமைக்க, மாநில அரசு உதவ வேண்டும் என, இந்திய விமான நிலையங்கள் ஆணை யம் கோரிக்கை வைத்துள்ளது.

அதை ஏற்று, அமைச்சர் ராஜா மேற்பார்வையில், சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது, விமானப்படை விமான நிலையத்திற்கும், பயணியர் விமான நிலையம் அமைய உள்ள இடத்திற்கும் இடையே, இணைப்பு சாலை பணிகள் நடந்து வருகின்றன.

விமான நிலையம் அமைக் கும் பணி முடிந்து செயல்பாட் டிற்கு வர ஓராண்டு ஆகலாம் என, ஒன்றிய அரசு வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பாதுகாப்புத் துறை செயலர், சிவில் விமானப் போக்குவரத்து செயலர் ஆகி யோரை, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சந் தித்து, தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்கும் பணி களை விரைவுப்படுத்தும்படி வலியுறுத்தி உள்ளார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *