ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், திராவிடர் கழகம்

கேள்வி 1: இந்தியா பட்டினிப் பட்டியலில் 111ஆவது இடத்தில் உள்ளதே என்ற கேள்விக்கு நாட்டிற்காக பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாதா  என்று ஸ்மிருதி இரானி கேட்டுள்ளாரே?

– ப.ஆறுமுகம், உத்திரமேரூர்

பதில் 1:அந்த அமைச்சர் தொடர்ந்து இப்படியே 2024 பொதுத்தேர்தல் வரை பேச வேண்டும் என்பதே நமது அன்பான வேண்டுகோள். ஏழை மக்களுக்கு – பசித்தவர்களுக்கு – பட்டை நாமம்!!!

கேள்வி 2:உத்தரப்பிரதேசத்தில் டிஜிட்டல் மருத்துவமனை என்ற பெயரில் நோயாளிகளைத் தொடாமல் அவர்களின் பிரச்சினைகளை கேட்டு மருந்து கொடுக்கும் முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளதே – இது தொழில்நுட்பமா அல்லது நவீன தீண்டாமையா?

– வே.காந்திமதி, திருத்தணி

பதில் 2: நவீன தீண்டாமை தான் – ஒரு சூதான சூழ்ச்சி!

கேள்வி 3:கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்திற்கான ஆடை தயாரித்து தரமாட்டோம் என்று கூறியுள்ளது. இதனால் அந்த நிறுவனத்திற்கு ரூ.19 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நிறுவனமா?

– மா.கோவிந்தசாமி, வேலூர்

பதில் 3: உணர்வுதான் இதில் முக்கியம் – பணமல்ல.

கேள்வி 4:“தலையைச் சீவிடுவேன்” என்று சொல்லிக்கொடுத்த இயக்கமல்ல, “தலைநிமிர்ந்து வாழவைக்க வைத்த இயக்கம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

– க.உயிர்மொழி, மதுரை

பதில் 4: சரியான பதிலடி – முதல் அமைச்சரின் முத்தாய்ப்பான தலைக்குட்டு!

ஆசிரியர் விடையளிக்கிறார், திராவிடர் கழகம்

கேள்வி 5:புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் என்ற ஒரு கட்சியே இல்லாமல் ஆக்கிவிடும் வேலையில் பா.ஜ.க. இறங்கியுள்ளதே?

– தா.அருள், திருச்சி

பதில் 5: பா.ஜ.க. அதை 4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி, இப்போது பூர்த்தி செய்யவே தயாராகிறது!

கேள்வி 6:பெண்கள் மீது கை வைப்பவர்களை தூக்கில் போடும் சட்டம் கொண்டுவருவேன் என்று ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவான் கூறியுள்ளாரே?

– வா.பகத்சிங், திண்டிவனம்

பதில் 6: தேர்தலில் முதலில் அவர் வெற்றி பெறுவாரா என்ற நிலையில் இப்படி ஒரு வீராப்பு – வெட்டிப் பேச்சா?

ஆசிரியர் விடையளிக்கிறார், திராவிடர் கழகம்

கேள்வி 7:இஸ்ரேலுக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு – பாலஸ்தீனத்திற்கும் உதவிப் பொருட்களை அனுப்புகிறாரே மோடி?

– கா.பாரி, கோவை

பதில் 7: அதுதான் ஆர்.எஸ்.எஸ்.; அவர்தான் மோடி . இரட்டைவேடம், ஆரியத்தின் இயல்புதான் அது!

கேள்வி 8: செயலாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகளையும், இராணுவத்தினரையும் அரசின் திட்டங்கள் குறித்த பரப்புரையில் ஒன்றிய அரசு கட்டாயமாக ஈடுபட ஆணையிடுகிறதே – அவர்கள் என்ன பா.ஜ.க. தொண்டர்களா?

– சு.பல்லவன், வியாசர்பாடி

ஆசிரியர் விடையளிக்கிறார், திராவிடர் கழகம்

பதில் 8: அரசமைப்புச் சட்டப்படியும், நியாயப்படியும் இது அரசு அதிகார துஷ்பிரயோகம்.

கேள்வி 9:இஸ்ரேல் விவகாரத்தில் சீனாவும் – அமெரிக்காவும் அப்பத்தைப் பங்குபோடும் குரங்குகளாக மாறிவிட்டனவா?

– சே.காளிமுத்து, பெரம்பலூர்

ஆசிரியர் விடையளிக்கிறார், திராவிடர் கழகம்

பதில் 9:“அமைதி வேண்டுமானால் போரைத் துவங்குங்கள்” என்ற ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. “If you want peace, prepare for a war.”

கேள்வி 10:“பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை என்னிடம் வந்திருந்தால் நான் அவரின் பிரச்சினையை தீர்த்திருப்பேன்” என்று தமிழிசை கூறியிருக்கிறார் – அவர் ஆளுநரா அல்லது கட்டப் பஞ்சாயத்துத் தலைவரா என்று மக்கள் கேட்கின்றார்களே?

– மா.சோலைகான், வாலாஜாபாத் 

ஆசிரியர் விடையளிக்கிறார், திராவிடர் கழகம்

பதில் 10:பழைய நடிகைக்குப் போட்டியாக இப்படி ஒரு நிலைப்பாடா? வேதனை! வேதனை!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *