ஜூம்லா புகழ் பஜனை கோஷ்டிகள்
*தி.மு.க. ஆட்சியில் 20 விழுக்காடு
தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்ற
வில்லை.
– பி.ஜே.பி. அண்ணாமலை குற்றச்சாட்டு
>>ஆமாம், நம்புங்கள், வங்கி கணக்கில் ஒவ்வொரு வருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுத்த(?) மோடியின் பிரதிநிதி பேசுவதைக் கேளுங்கள், கேளுங்கள், ஜூம்லா புகழ் பஜனை கோஷ்டிகளா இப்படியெல் லாம் பேசுவது?
இப்பொழுதாவது….
*மொழி, மதத்தால் வேறுபட்டு நிற்கிறோம்.
– ஆளுநர் ரவி
>>உண்மைதான்! ஒரே நாடு, ஒரே மொழி என்ற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸின் முழக்கம் பொய் என் பதை இப்பொழுதாவது ஆளுநர் உணர்ந்து இருக்கிறாரே, அதுவரை மகிழ்ச்சிதான்!