கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2.12.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய திண்டுக்கல் டாக்டரிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டல் – ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஈ.டி அதிகாரி கைது: மதுரை அமலாக்கத் துறை ஆபீசில் ரெய்டு – உள்ளே விடாமல் தடுத்ததால் கடும் வாக்குவாதம்.

👉 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல ஆளுநர்; அவர் வெறும் ‘நாமினி’ தான். பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் இல்லை, ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉பாஜகவிற்கு எதிராக சமூக நீதி சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வி.பி.சிங்கிற்கு சிலை வைத்து, அதில் அகிலேஷ் யாதவையும் பங்கு பெற வைத்துள்ளார் என்கிறார் கட்டுரையாளர் நீரஜ் சவுத்ரி.

👉நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்ணியக் குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டினால், என் மீது விசாரணை மேற்கொள்கிறார்கள் என டேனிஷ் அலி, எம்.பி. புகார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉கொல்கத்தா சட்டப்பேரவை வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் போது தேசிய கீதத்தை அவமதித்ததாக எழுந்த புகாரின் பேரில் 11 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொல்கத்தா காவல்துறையினர் தாக்கீது அனுப்பியுள்ளனர்.

👉உத்தர்காசியின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக வெகுமதியை மறுத்த எலி துளை சுரங்கத் தலைவர் வாகீல் ஹாசன். ”நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும், வெறுப்பு விஷத்தை பரப்பக்கூடாது.” என்பது மட்டுமே நான் சொல்லும் செய்தி என்கிறார்..

தி டெலிகிராப்:

👉அடுத்த 10 ஆண்டுகளில் 50 சதவீத பெண்களை முதல்வர்களாக்குவதே காங்கிரஸ் கட்சியின் இலக்கு என்கிறார் ராகுல் காந்தி.

👉உத்தரகாசி சுரங்கப்பாதை இமயமலை நிலப்பரப்பை ஆபத்தான முறையில் சீர்குலைப்பதாக வந்த வழக்கு களையும் புறந்தள்ளி, மோடி அரசு இந்த பாதையை அனைத்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

👉பிரதமர் மோடியின் படங்களை பின்னணியில் வைத்து செல்ஃபி பாயின்ட்களை அமைக்குமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *